மனைவி மாயம் கணவர் புகார்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம், பொய்குனம் சாலையைச் சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயி. இவரது மனைவி அலமேலு, 59; சங்கராபுரத்தில் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 23ம் தேதி வேலைக்குச் சென்ற அலமேலு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement