விதிமுறைகளை மீறும் சுற்றுலா வாகனங்கள்
வால்பாறை: வால்பாறையில் சாலையோரம் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களையடுத்து, கோவை மாவட்டம் வால்பாறைக்கு தான், அதிக அளவில் சுற்றுலாபயணியர் வருகின்றனர்.
தற்போது கோடைவிடுமுறை என்பதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வால்பாறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நகரில் சுற்றுலாபயணியர் வாகனங்கள் நிறுத்த ‘பார்க்கிங்’ வசதி இல்லாதால், வேறு வழியின்றி சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
சுற்றுலா வாகனங்களால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், ‘வால்பாறை நகராட்சி சார்பில், அண்ணாதிடலில் ‘பார்க்கிங்’ வசதியுடன் கூடிய ஸ்டேடியம் அமைக்கும் பணி, கடந்த பத்து மாதங்களாக நடந்து வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் பருவ மழை தீவிரமடையும் முன்னதாக, பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்