விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி
சென்னை: 'ஆதரவு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, பொதுக்கூட்டம் நடத்த, த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.
பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைக்க தடுமாறிய த.வெ.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., - கம்யூ., கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு கொடுத்தன. இதனால், த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து, விஜய் முதல்வரானார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் இணைந்து, பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டம், ஆதரவு கட்சிகளை, த.வெ.க., கூட்டணி கட்சிகளாக அறிவிக்கும் விதமாக ஏற்பாடு நடக்கிறது.
த.வெ.க.,வின் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும், இந்த பொதுக்கூட்டம், வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, தனது ஆஸ்தான ஜோதிடரிடம், நல்ல நாளை கணித்து கொடுக்கும்படி, முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கோவை சிறுமி பாலியல் வழக்கு, மின் தடை பிரச்னை உள்ளிட்டவையால், நடத்த முடியவில்லை.
இந்த பொதுக்கூட்டத்தில், த.வெ.க., கூட்டணிக்கு, 'மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி' என பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹா ஹா ஒட்டுண்ணிகளை வைத்திருந்தா அதற்கு பெயர் மதசார்பற்ற கூட்டணி
ஒரு ஜாதி கட்சி? ஒரு மத கட்சி வைத்து கொண்டு மதசாற்ப்ற்றனு சமூகநீதினு பேசுவது...
ஆம்.. ஹிந்து அல்லாத எந்த மதமும் சம்மதம்... முஸ்லிம்கள் பதவி ஏற்கும் முன் ஓதலாம், தொழுகை செய்யலாம், VJ உட்பட எல்லா கிறிஸ்துவர்களும் பைபிள் வசனம் சட்டசபையில் படிக்கலாம்... ஆனால், ஹிந்துக்கள் ஓட்டு மட்டும் இவங்களுக்கு போடணும் அனா இவங்க கும்பிடும் தெய்வம் ஆகாது... மதம் இவர்களுக்கு முன் முந்திக்கொண்டு வரும்... இதை மாதசார்பற்ற கட்சியாம் நம்புங்க TVK kku ஓட்டு போட்ட ஹிந்து மக்களே?!மேலும்
-
பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்ராசிட்டி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
-
சித்தேரியில் கழிவுநீர் கலப்பு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
-
குழந்தைகள் பாதுகாப்பு: எவரையும் நம்பாதீர் பெற்றோரே!
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
ஆசிரியர் வருகைக்கு எஸ்.எம்.எஸ்., திட்டம் மீண்டும்... செயல்படுத்தப்படுமா?:மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவது அவசியம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி; கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்