ஆசிரியர் வருகைக்கு எஸ்.எம்.எஸ்., திட்டம் மீண்டும்... செயல்படுத்தப்படுமா?:மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவது அவசியம்
கடலுார்:அரசு பள்ளிகளில் கைவிடப்பட்ட ஆசிரியர் வருகை எஸ்.எம்.எஸ்., திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் கல்வியில் பின்னுக்கு தள்ளப்பட்பட்ட கடலுார் மாவட்டம் முன்னுக்கு கொண்டு வர வாய்ப்பாக அமையும்.
அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, 'எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம்' கடலுார் மாவட்டத்தில் முறைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சியில் 10வது இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம் 19வது இடத்திற்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் 20ம் இடத்தில் இருந்த மாநில தர வரிசை 21வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதற்கு ஆசிரியர்கள் பங்கு அதிகம். கடந்த, 2011ம் ஆண்டில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தின் ஒரு பகுதியாக, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, தர்மபுரி, கடலுார் ஆகிய இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2012 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திட்டத்தின்படி, தலைமையாசிரியர் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வருகை குறித்து, காலை 10:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். இந்த தகவல் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'நிக்நெட்' பதிவாகும். அதன்காரணமாக ஆசிரியர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள இயலும்.
தலைமையாசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பணிச் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டம் விரிவுப்படுத்தாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு தாமதமாக வருதல், இடையில் அறிவிப்பு இன்றி வெளியிடங்களுக்கு செல்லுதல், அறிவிப்பு இல்லாமல், 'அட்ஜெஸ்மென்ட்' என்ற பெயரில் விடுமுறை எடுத்தல் போன்றவை, பல்வேறு அரசு பள்ளிகளில் சாதாரணமாகியுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில தனியார் பள்ளிகள் போன்று, வகுப்பு ஆசிரியர் மூலம் வாரத்துக்கு ஒரு முறையாவது, மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்கு போனில் தெரிவிக்க வேண்டும். பாதை மாறும் மாணவர்களை, இம்முறையில் எளிதாக அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க இயலும். எனவே கல்வியில் பின்தங்கிய கடலுார் மாவட்டத்தில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என பெற்றோர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி