சித்தேரியில் கழிவுநீர் கலப்பு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
கள்ளக்குறிச்சி: க ள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள சித்தேரி 38 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி கடந்த காலங்களில் விவசாயம் நடந்தது.
ஏரியின் நீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி நீர் வரத்து தடைபட்டது. இதனால், ஏரி வறண்டதுடன் விளாந்தாங்கல் சாலை உள்ளிட்ட நகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கும் இடமாக மாறியது. அதில், பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்தது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் எனவே, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இணைந்து, சித்தேரியில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர். ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன.
அதன்பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏ ரியை பராமரிக்க முன்வரவில்லை. இதனால், சீரமைக்கப்பட்ட சித்தேரி மீண்டும் கழிவுகள் கலந்து பழைய நிலைக்கு மாறத் துவங்கியுள்ளது. கழிவுநீர் தேங்குவதுடன், குப்பைகள் கொட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீ ர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரத்து வாய்க்கால், நீர் வெளியேறும் வடிகால் அனைத்தும் அடைபட்டு, துார்ந்துபோயுள்ளது. ஏரியின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட தலைநகரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சித்தேரி ஏரியை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி