வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி; கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
சென்னை: 'தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில், தாசில்தாரிடம் அனுமதி பெற்று, எவ்வித கட்டணமும் இல்லாமல், வண்டல் மண் எடுத்துச் செல்லலாம்' என, அரசு உத்தரவிட்டதால், இதில் வசூல் பணியில் இருந்த ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில், 40,000 ஏரி, குளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், இவற்றை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோருக்கு, நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் தேவைப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில், விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோர், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்று, வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்றாலும், அனைத்து மாவட்டங்களிலும், நீர் நிலைகளில் மண் எடுக்க, பழைய ஒப்பந்ததாரர்கள் இருந்தனர். அவர்கள் தங்களிடம் குறிப்பிட்ட தொகையை, கட்டணமாக கொடுத்தால் தான், மண் எடுத்து தருவோம் எனக்கூறி வசூலில் ஈடுபட்டனர். இதனால், அரசு அனுமதித்தும், மக்கள் பணம் செலுத்தியே வண்டல் மண் பெறும் நிலை ஏற்பட்டது.
ஆட்சி மாறிய நிலையில், தாசில்தார்களிடம், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்று, மக்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என, அனுமதி வழங்கப்பட்டது. 'இ - சேவை' இணையதளத்தில், இதற்காக விண்ணப்பித்தால் போதும். 10 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த முறை, மண் அள்ளிப்போடும் பணிக்கு, ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வண்டல் மண் எடுக்கும் விவகாரத்தில், ஒப்பந்ததாரர்களின் வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள், தங்கள் தேவைக்கான வண்டல் மண்ணை, தாசில்தாரின் அனுமதி அடிப்படையில் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தனியார் ஒப்பந்ததாரர்கள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வசூல் ஒப்பந்ததாரர்கள் வெளியேறி உள்ளனர். அரசு அறிவித்தபடி, மக்களுக்கு இலவசமாக, மண் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
கிராவல் மண், ஆற்று மணல் விவகாரத்திலும், ஒப்பந்ததாரர்கள் வசூலுக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றார்.
அவர்கள் ஒப்பந்ததாரர்களா அல்லது கட்சி காரர்களா? ஒப்பந்தம் என்று ஒன்று இருந்தால் அது எப்படி முறிக்கப் படும்?
யார் அந்த ஒப்பந்ததாரர்கள்? எல்லாமே திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு கப்பம் கட்டியவர்கள்தான். இப்போது எங்கே ஓடுவார்கள், அறிவாலயத்துக்குத்தான் ஓடி புலம்புவார்கள். எப்படியோ திராவிட கொள்ளை கும்பல்களை அலறவிட்டு ஓடவைத்த புதிய அரசுக்கு நன்றிகளை உரக்க சொல்வோம். சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்து சிறப்படுத்தினால் இன்னும் சந்தோசமே.
தற்குறி ரீல்ஸ் அப்படீன்னு ஒரு புது செய்திப் பகுதியை ஆரம்பித்து விடலாம் என்று பத்திரிகை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் குளங்களில் வண்டல் எடுக்க தென்னை மா கரும்பு விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசியல் வாதிகள் அதிகாரிகள் கெடுபிடியால் வண்டல் மண் எடுக்க "பலவகைகளிலும் செலவு செய்து" அல்லலுருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.
வெரி நைஸ் மெசேஜ்
"வண்டல் மண் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, தமிழகம் முழுவதும் ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் என்ற பெயரில் பகிரங்கமாகக் கொள்ளையடித்து வரும் பிற ஒப்பந்ததாரர்கள் மீதும் புதிய அரசு இதேபோன்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அளவில் தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே சாமானிய மக்களுக்கு அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் முழுமையாகப் போய்ச் சேரும். இந்த ஒப்பந்ததாரர்களின் ஆட்டத்தை முற்றிலும் அடக்க வேண்டும்"மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி