பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு ரத்தா? சி.பி.எஸ்.இ., மறுப்பு
சென்னை: 'பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கான மறுமதிப்பீட்டு செயல்முறைகள் ரத்து செய்யப்பட்டதாக, சமூக வலைதளங்களில், சி.பி.எஸ்.இ., முத்திரையுடன் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களில் பலர், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு மறுமதிப்பீட்டு முறை, தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே கட்டணம் செலுத்தியோருக்கு, 15 வேலை நாட்களுக்குள், பணம் திருப்பி செலுத்தப்படும்.
மதிப்பெண் குறைந்ததாக கருதுவோருக்கு உரிய வழிவகைகள் செய்யப்படும் என, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்ததாக, அவரது கையொப்பத்துடன், ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது. இது, பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் இடையே, குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், 'இந்த தகவல் முற்றிலும் போலியானது; இதுபோன்ற பொய் தகவல்களை நம்ப வேண்டாம்; எப்போதும் சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்' என்று, தெளிவுப்படுத்தி உள்ளார்.
மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
@block_B@ வசூலித்த கூடுதல் கட்டணம் திருப்பித்தர ஒப்புதல் 'விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தோரிடம் வசூலிக்கப்பட்ட, கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. விடைத்தாள் நகல் கோரி பலர் விண்ணப்பித்த போது, தொடர்ந்து மூன்று நாட்களாக இணையதளத்தில் பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும், சிலருக்கு கட்டணம் செலுத்தும் போது, வாரியம் நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு அதிகமாகவும், சிலருக்கு மிக குறைவாகவும் இணையதள தகவல் வந்தது. பலருக்கு பணம் செலுத்தியும், 'பெய்டு' என, வரவில்லை. இதுபற்றி பலர் புகார் அளித்தனர். இதில், ஒரு பாடத்துக்கு, அதிகபட்சமாக 69,420 ரூபாய், குறைந்தபட்சமாக ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அதிக கட்டணம் செலுத்தியோர் கண்டறியப்பட்டு, அவர்களின் கூடுதல் தொகை, செலுத்திய வழியிலேயே திருப்பி அனுப்பப்படும். அதேபோல, குறைவாக செலுத்தியோர், நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். மீதித்தொகையை செலுத்தும் வழிமுறை குறித்து, தனித்தனியாக விளக்கப்படும் என்று, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.block_B
மேலும்
-
பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்ராசிட்டி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
-
சித்தேரியில் கழிவுநீர் கலப்பு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
-
குழந்தைகள் பாதுகாப்பு: எவரையும் நம்பாதீர் பெற்றோரே!
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
ஆசிரியர் வருகைக்கு எஸ்.எம்.எஸ்., திட்டம் மீண்டும்... செயல்படுத்தப்படுமா?:மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவது அவசியம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி; கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்