தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா: அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்க உத்தரவு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட விளக்கம்:

மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் ஆய்வு கூட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில், கடந்த 21ம் தேதி நடந்தது.

கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பங்கேற்று, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, 2019 முதல் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள விண்ணப்பங் களை, வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து, தகுதியுள்ள, கிளினிக் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும், தற்காலிக சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. புதிதாக 8,000 கிளினிக், மருத்துவமனைகள் தொடங்க, அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement