அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி: காங் - எம்பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்
சிவகாசி: ''எதிர்க்கட்சி தலைவராக பொறுப்புடன் செயல்பட வேண்டிய உதயநிதி, பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்,'' என, காங்., -- எம்.பி., மாணிக்கம் தாகூர் சாடினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்துக்கொண்டு இளைஞரணி கூட்டத்தை கூட்டி, காங்கிரசுக்கு எதிராக பேசி இருக்கிறார் உதயநிதி.
அவரை துணை முதல்வராக தோளில் சுமந்த கட்சி காங்கிரஸ். தி.மு.க., கொள்கைகளை உதயநிதி குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, துள்ளி குதித்தவர் உதயநிதி.
பா.ஜ., உத்தரவின்படி, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததையடுத்து, த.வெ.க., உடன் காங்., கூட்டணி அமைத்தது. த.வெ.க., தலைவர் விஜய், தமிழக முதல்வராக கூடாது என பா.ஜ., நினைத்தது.
கடந்த 4ம் தேதி மாலை, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர், அ.தி.மு.க., -- தி.மு.க., கூட்டணி அமைக்க, 'கனெக்டிங் கால்' போட்டுள்ளார். இதை அறிந்து தான், மறுநாள் டில்லியில் காங்., உயர்நிலை கூட்டத்தை கூட்டி, மே 6ல் த.வெ.க., உடன் கூட்டணி என்ற முடிவை அறிவித்தோம்.
அ.தி.மு.க., -- தி.மு.க., கூட்டணி அமைக்க முயன்றதை மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய செயலர் பேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். பொய் நாடகங்களை தி.மு.க., நிறுத்த வேண்டும்.
அ.தி.மு.க., -- தி.மு.க., சேர்ந்து, விரைவில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பர். லோக்சபாவில் தனியாக இடம் கேட்கும் தி.மு.க., மெல்ல பா.ஜ ., அருகில் சென்று விடும். வரும் 2029 லோக்சபா தேர்தலை அ.தி.மு.க., -- தி.மு.க., - பா.ஜ., இணைந்து உள்ளது
'இண்டி' கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., விலகி விட்டது; அதற்கு பதிலாக த.வெ. க., இணைந்து உள்ளது.
இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும். விரைவில் த.வெ.க., தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்படும். தேசிய அளவில் பா.ஜ.,வை வீழ்த்த, ராகுல் தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
'சாத்தியமில்லை என்றார் ஸ்டாலின்; சாத்தியமாக்கி காட்டினார் விஜய்'

காங்.,கை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் அளித்த பேட்டி: தேர்தல் முடிவுக்கு பின் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் கூட்டணி பேசியதை அ.தி.மு.க.,வை சேர்ந்த சண்முகம், வேலுமணி வெளிப்படையாக கூறியுள்ளனர்.
எந்த காலத்திலும், யார் முதுகிலும் காங்., குத்தியது இல்லை. தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாசிச சக்தியோ, மதவாத சக்தியோ ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிக்கிறோம்.
இந்த அரசில் தவறு நடந்தால், காங்., தட்டி கேட்கும். கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான்.
விக்கிரவாண்டி த.வெ.க., கூட்டத்தில், 'கூட்டணி ஆட்சி சாத்தியம்' என்று விஜய் கூறினார். ஆனால் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'அது சாத்தியமில்லை, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கூறினார்.
சாத்தியமில்லை என ஸ்டாலின் சொன்னதை, முதல்வர் விஜய் சாத்தியமாக்கி காட்டியுள்ளார். இப்போது அமைந்துள்ள கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கவில்லை; மஹாராஷ்டிரா, ஹரியானாவில் தான் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவோடு கூட்டணி தொடர்வதற்காக அறிவாலயம் அலுவலகத்திற்கு தினம் மூன்று முறை விஜயம் செய்து கூட்டணியை உறுதி செய்த சிதம்பரம் போன்ற எல்லா காங்கிரஸ் தலைவர்களும் நன்றியற்றவர்கள். ஊசிமுனை ஆதரவில் ஆட்சி நடத்தும் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறோம் என கூறும் இந்த தலைவர்கள். அந்த கட்சி நீண்ட காலமாக ICU வில் தொடர்ந்து இருந்தாலும் தமிழகத்தில் இன்னமும் உயிரோடு இருக்க திமுக தான் காரணம் என்பதை மறக்க கூடாது.மேலும்
-
பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்ராசிட்டி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
-
சித்தேரியில் கழிவுநீர் கலப்பு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
-
குழந்தைகள் பாதுகாப்பு: எவரையும் நம்பாதீர் பெற்றோரே!
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
ஆசிரியர் வருகைக்கு எஸ்.எம்.எஸ்., திட்டம் மீண்டும்... செயல்படுத்தப்படுமா?:மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவது அவசியம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி; கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்