2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்

சோமங்கலம்: குன்றத்துார் அருகே சோமங்கலம் புதுநல்லுாரில், கடந்த 23ம் தேதி, விஜயன் மற்றும் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரது வீடும் தீக்கிரையானது. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின.

இந்நிலையில் சோமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கும் தலா 5,000 ரூபாய், 25 கிலோ அரிசி மூட்டை, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், ஆடைகள், பாய், தலையணை, சமையல் பாத்திரம் உள்ளிட்டவற்றை வழங்கி, நேற்று ஆறுதல் கூறினர்.

Advertisement