போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

3

சென்னை: மதுரையில் 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் சிறுவன் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலக் போலீசார் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
மேலும், புதிய தவெக அரசு தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.தமிழகம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து தவெக அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement