மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!
நமது சிறப்பு நிருபர்
நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடத்தில் இருக்கிறார்.
முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஜனவரி 24ம் தேதி, 1966ம் ஆண்டு முதல் மார்ச் 24ம் தேதி, 1977ம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த இந்திராவின் சாதனையை கடந்த 2025ம் ஆண்டே பிரதமர் மோடி முறியடித்து பட்டிலியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தற்போதைய பிரதமர் மோடி 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், பின்னர் 2014, 2019 மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று, சாதனை படைத்து இருக்கிறார். அவர் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதற்கு வாழ்த்து தெரிவித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மே 26, 2014 அன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற அந்த நாள், நாட்டின் நிர்வாகம், தலைமைத்துவம் மற்றும் தேசிய உறுதிப்பாடு ஆகியவற்றில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்திய நாளாக அமைந்தது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன் முதல், தற்சார்பு இந்தியா மற்றும் டிஜிட்டல் மாற்றம், உள்கட்டமைப்பு விரிவாக்கம், தேசிய பாதுகாப்பு கொள்கை வரை பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் முன்னேறியுள்ளது.
இன்று, இந்தியா உலகத்தின் முன் முன்னெப்போதையும் விட வலிமையான, அதிக தன்னம்பிக்கை கொண்ட மற்றும் பெருமைமிக்க ஒரு தேசமாகத் திகழ்கிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேறு எந்தக் காலத்தையும் விட அதிக அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் மாறியுள்ளது. பல ஆண்டுகளாக சமூகத்தின் விளிம்பிலேயே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மக்கள், இன்று இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தீவிரப் பங்களிப்பாளர்களாக மாறியுள்ளனர்.
மோடி தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் தாய்நாட்டிற்கும், தனது சக நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதிலேயே அர்ப்பணித்துள்ளார். அவரது அயராத உழைப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் நாட்டிற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கான மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன.
நாட்டிற்குத் தொடர்ந்து சேவையாற்ற அவருக்குச் சிறந்த உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த வலிமையை இறைவன் அருள வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
only because of that 16 years + dark age india has never recovered and advanced
ஆயுஷ்யேவேந்திரியே ப்ரதி திஷ்டதி.
1947 முதல் 1951 வரை நேரு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே, தர்க்கரீதியாக 1951 முதல் 1964 வரை அவர் பிரதமராக இருந்தார். 16 வருஷம் 288 நாட்கள் எங்கிற ஒரு கணக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த ரெகார்டும் 2029 தேர்தலில் உடையும்
இவரால் சாமானிய மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பலசரக்கு கடைகளிலும், மெடிக்கல் ஷாப் களிலும் , தனியார் நிறுவன இங்களிலும் ஜவுளி கடைகளிலும் பணிசெய்யும் கோடிக்கணக்கான மனிதர்கள் வந்தே பாரத்தில் போகமுடியாத்து போலவே அனைத்திலும் உள்ளது . நோ யூஸ்
மிக மட்டமான கருத்து மகாதேவா...என்ன செய்ய உன் மூளைக்கு எட்டியது அதுதானே
வாழ்த்துக்கள் நாட்டுக்காக ஓடி, ஓடி ஓய்வில்லாமல் உழைத்த உங்களுக்கு சற்று ஓய்வு தேவை. எனவே, அடுத்த லோக்சபா தேர்தல் வரும்போது, மேலும் 5 வருடம் மட்டும், பிரதமராக தொடர்ந்து, திரு.ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து விட்டு, அதன் பிறகு, வயதை காரணம் காட்டி, தாங்களாகவே கௌரவமாக, ராஜினாமா செய்துவிட்டு, தங்களுக்கு பிறகு, பிரதமர் பதவிக்கு யார் என்பதை அடையாளம் காட்டி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக, இருக்க வேண்டுகிறேன். நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். உங்கள் சேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
நிறைய பேருக்கு இளநீர், நொங்கு, பர்னால் தேவைப்படும் .... ஃபேனை பத்துல வெச்சுக்கணும் .....
வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் மோடிஜி அவர்கள் அந்த பிரதமர் பதவியில் இருந்துகொண்டு நாட்டுமக்களுக்கு நல்லது செய்யவேண்டும். கடவுள் அவர்க்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்தருளவேண்டும்.
ஐந்தாண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாதவர்கள் எல்லாம் மோடிஜியை பேசியதை நினைத்தால், கடவுள் இருக்கான் குமாரு...
Modiji is going to be the PM as long as he is able to carry on. With Gods grace he will be willing to shoulder any responsibility as he is not a selfish human being. Jai Shri Ram