தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு; இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று (மே 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் கிராம் 14,730 ரூபாய்க்கும், சவரன் 1,17,840 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்றைய நிலவரம்



நேற்று (மே 25) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 14,780 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,18,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (மே 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement