தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு


சென்னை: சென்னையில் இன்று (மே 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம், தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,730 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,17,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று (மே 24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (மே 25) வார தொடக்க நாளில் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.

அதன் படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement