உயிரிழந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு வீட்டு மனை
புதுக்கோட்டை: தவறான சிகிச்சையால் உயிரிழந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு, அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் அருகே, மணக்குடிபட்டியை சேர்ந்த வீரமணியின் மகள் சீதாலட்சுமி. இவர், திருச்சி அரசு மருத்துவமனையில், மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்தார்.
அவரது மூக்கில் சதை வளர்ச்சி இருந்ததால், அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தவறான சிகிச்சையால், நேற்றுமுன் தினம் உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்தினரை, தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன்பின், சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டுமனை பட்டா, அவரின் சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக பணிக்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை, அரசு சார்பில் அவர்கள் வழங்கினர்.
காசு கொடுத்தா எல்லாம் சரி ஆகிவிடுமா ? குற்றங்கள் வாராமல் இருக்க வழி