மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

10

புதுடில்லி: மேகதாது அணை திட்ட அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தை நாடி அந்த முயற்சிகளை தடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்கக்கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்து கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று (மே 25) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Advertisement