பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்க மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி 23 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2025-26ல் இப்பள்ளி மாணவி எஸ். ஜீவாஸ்ரீ 500க்கு 492ம், கே.விமலா 487 ம், வி.சபிதா, எஸ்.வந்தனா ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். 470க்கு மேல் 19பேரும், 450க்கு மேல் 31பேரும், 400க்மேல் 50 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கடந்த 23 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். சாதித்துள்ள மாணவர்கள், அவர்களுக்கு உதவிய ஆசிரியர்களை பள்ளித்தாளாளர் கணேசன், செயலாளர் கார்த்திக் ராமன், முதல்வர் செங்கொடி ஆகியோர் பாராட்டினர்.---