வேன் மோதி விபத்து அரசு டாக்டர் பலி

திண்டிவனம்: திண்டிவனத்தில் சாலையை கடக்க முயன்ற அரசு சித்த மருத்துவர் மினி சரக்கு வேன் மோதி இறந்தார்.

திண்டிவனத்தில் மரக்காணம் சாலையைச் சேர்ந்தவர் முருகன், 58; இவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திண்டிவனம் செஞ்சி சாலையில் கிளினிக் வைத்துள்ளார்.

இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் குப்பைகளைக் கொட்டுவதற்காக  வீட்டின் எதிரே திண்டிவனம் – மரக்காணம் சாலையை நடந்து கடக்க முயன்றார்.

அப்போது மானுாரிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி சரக்கு வேன் முருகன் மீது மோதி, சிறிது துாரம் இழுத்துச் சென்றது.

இதில், படுகாயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement