போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் (மே 25) காலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், புதுப்பித்தல் பிரிவு, தகுதிச் சான்று பிரிவு மற்றும் விழுப்புரம் கிளை 1 ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.
பின், போக்குவரத்துக் கழகத்தின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, தொழிலாளர் நலன் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, அனைத்து பிரிவுகளிலும் செலவினத்தை குறைக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும் புகார் வராமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்குப்பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், 'அரசு பஸ்கள் தொடர்பான ஆன்லைன் புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. பணியில் உள்ள ஊழியர்கள், விடுமுறையில் உள்ளவர்கள், பணிக்கு வராமல் ஆப்சென்டாகியவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஊழியர்களுக்கான பணி ஒதுக்கீடு மற்றும் அந்த பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வருவாய் உள்ளது. செலவு குறைவாக உள்ளது. செயல்பாடு சிறப்பாக உள்ளது. பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினேன்.
இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பணியாளர்களின் குறைகள் பூர்த்தி செய்யப்படும்' என்றார்.
போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர்கள் ஜெகதீசன், ரவீந்தர் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு; பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்
-
(அரை பக்க விளம்பர விருப்பம்) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி
-
தனியார் மனமகிழ் மன்ற மதுபான கடைகளால் மக்களுக்கு தொல்லை
-
அதிக விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட 69 இடங்கள் அவிநாசி ரோட்டில் மட்டும் 7 ஹாட் ஸ்பாட்
-
மணல் கடத்தலுக்கு உடந்தை 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
காலி நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை