அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் உள்ளிட்ட 3 பேர் திடீர் ராஜினாமா: தவெகவில் ஐக்கியம்
சென்னை; அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவான எஸ்பி வேலுமணி மற்றும் மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவி சண்முகம் தலைமையில் ஒரு பிரவாகவும் எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதில் வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்ற, அதன் பின்னர் ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை இபிஎஸ் அதிரடியாக பறித்தார். தவெக அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி கோஷ்டி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட அங்கிருந்த சிலர் இன்று இபிஎஸ்சை சந்தித்து கோஷ்டி மாறினர்.
இந் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதங்களை அவர்கள் 3 பேரும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து வழங்கி உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு;
மரகதம் குமரவேல் - மதுராந்தகம் தொகுதி
சத்யபாமா - தாராபுரம் தொகுதி
ஜெயக்குமார் - பெருந்துறை தொகுதி
3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அதிமுகவின் பலம் 47ல் இருந்து 44 ஆக குறைகிறது. ராஜினாமா செய்த மூவரும் அமைச்சர் ஆதவை சந்தித்தனர். அதன் பின்னர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
இவர்கள் ஆ .தி. மு க விற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். எனவே இவர்களை மீண்டும் மக்கள் வரவே விடக்கூடாது, எந்த கட்சியில் சேந்து வந்தாலும் அல்லது சுயேட்சையாக போட்டி போட்டாலும் மக்களே துரோகிகளை மன்னிக்காதீர்கள் தண்டனை கொடுங்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் காரணம் சொல்லட்டும், ஆனால் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்தது மாபெரும் துரோகம். மன்னிக்க முடியாதது.
மெல்லத் திராவிட கட்சிகள் இனி சாகும். சபாஷ்.
ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்று, பிறகு தங்களுது சொந்த காரனுங்களுக்காக வேறு ஒரு கட்சிக்கு தாவுவது எப்படியாப்பட்ட கேப்மாரித்தனம். அப்படிப்பட்டவர்களின் MLA பதவி பறிக்கப்படவேண்டும். கட்சி தாவல் தடுப்பு சட்டம் என்று ஒன்று இருந்ததே. அது என்னவாயிற்று? தங்களுடைய சொந்த பயனுக்காக கட்சி தாவுவது மக்களை ஏமாற்றும் ஒரு செயல். கட்சிமாறுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
கவர்னர் மாளிகையை பாஜக தனது கட்சி அலுவலகமாக மாற்றுகிறது என பொய் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினர் அவ்வப்போது கூறுவதுண்டு. ஆனால் இன்று தவெக நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல் நாடகங்கள் முழுவதுமே சட்டமன்ற வளாகத்திற்குள் அதுவும் அதிகாரபூர்வ அமைச்சர் அலுவலகத்திலேயே நடைபெற்றுள்ளது. இப்படிபட்ட ஒரு அநாகரீகமான செயலை தமிழகத்தில் 75 ஆண்டுகளாக நீண்ட அரசியல் செய்துவரும் திராவிட கட்சிகள் கூட முயற்சிக்கவோ யோசித்ததோ கூட இல்லை. இது தவெகவின் மோசமான ஆட்சி அரசியல் தொடக்கம். தமிழகத்தில் அரசியல் திசை மாறி போய் கொண்டிருக்கிறது என்பது வருத்தத்திற்குறிய செயல்.
மானமுள்ள தமிழர்கள் இந்த மூவரையும் தோற்கடிக்க வேண்டும் தேர்தல் கமிஷன் இவர்கள் அனைவரும் அதே தொகுதியில் போட்டியிட்டால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் இவர்கள் விளையாட்டுக்கு தமிழக மக்களின் வரி பணம் செலவழிக்க வேண்டுமா அடுத்து ஆறு வருடத்திற்கு இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் இயற்ற வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கும் அறிவு வரும் தமிழகம் உருப்படும்.
பெட்டி வரும் முன்னே. வாரியம் வரும் பின்னே.. ஆனா தொகுதி மக்களுக்காக இந்த தியாகத்தை செய்தோம் என்று சொல்லுவான் பாருங்க, அது தான் ரொம்ப அசிங்கமா இருக்கும். 100% அக்மார்க் தூய சக்தி.
அறியாமல் சினிமாக் கவர்ச்சியால் மதி மயங்கி செய்தத் தவறு என மக்களை உணரச் செய்யும் செயல்கள் ஆரம்பம் முதல் அரங்கேறுகிறது.
திராவிடங்கள் இரண்டும் முடிந்துவிட்டது .நேர்மையானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதனால் முதல் திராவிடத்தின் நேர்மைவாசிகலும் சிந்தித்து செயல்பட்டு தங்களின் வருங்காலத்தை நிர்ணயம் செய்யவேண்டும் .காலம் தாழ்த்தினால் தகுந்த இடம் கிடைக்காது .ஆலுபாருடன்தான் போகவேண்டும் என்று அவசியம் கிடையாது .அரசியலில் மாற்றங்கள் நிதாழ்ந்துகொண்டிருக்கின்றது .காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள் .
WELL SAID. பணம் பத்தும் செய்யும்.
செலவழித்த காசு பல மடங்காக வந்துவிட்டது.லாட்டரி குடும்பக் காசு விளையாடுது.மேலும்
-
78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு; பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்
-
(அரை பக்க விளம்பர விருப்பம்) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி
-
தனியார் மனமகிழ் மன்ற மதுபான கடைகளால் மக்களுக்கு தொல்லை
-
அதிக விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட 69 இடங்கள் அவிநாசி ரோட்டில் மட்டும் 7 ஹாட் ஸ்பாட்
-
மணல் கடத்தலுக்கு உடந்தை 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
காலி நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை