ஆரோவில் வளர்ச்சிப்பணிகள்; மத்திய அமைச்சரிடம் விளக்கம்
வானுார்: ஆரோவில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அறக்கட்டளை செயலாளர், மத்திய அமைச்சரிடம் விளக்கம் அளித்தார்.
ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, டில்லி மத்திய கல்வி அமைச்சகத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்ததார்.
அப்போது, சர்வதேச நகர் ஆரோவில்லில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள், ஆரோவில் அடைந்துள்ள முக்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கினார்.
இந்த சந்திப்பின் போது ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அதிகாரிகள் சீத்தாராம், கோயல் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உனிருந்தனர்.
இது குறித்து ஜெயந்தி ரவி கூறுகையில், 'ஆரோவில் தனித்துவமான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.