ஹைமாஸ் விளக்கு  எரியாததால் மக்கள் அவதி 

பெண்ணாடம்:பெ.பொன்னேரி ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.

விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கனரக, இலகுரக வாகனங்கள் ஏராளமாக செல்கிறன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டதால் கடந்த 5 மாதங்களுக்கு முன் தனியார் சிமென்ட் ஆலை சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் ஹைமாஸ் விளக்கு அடிக்கடி பழுதாகி எரியாததால் இரவு நேரங்களில் ரவுண்டானாவில் விபத்து தொடர் கதையாக உள்ளது.

மேலும், பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும், ரவுண்டானாவை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சமடைகின்றனர். எனவே, பெ.பொன்னேரி ரவுண்டாவில் ஹைமாஸ் விளக்கு எரிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement