முதல்வர் விஜய் போட்டோ ஆர்டர் கொடுக்கும் அலுவலர்கள்
தமிழகத்தில் யார் முதல்வராக இருக்கிறார்களோ அவரது போட்டோ, அரசு அலுவலகங்களில் பிரேம் செய்து மாட்டி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்று, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோக்கள் அகற்றப்பட்டு, முதல்வர் விஜய் போட்டோ வைப்பதில் அலுவலர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் போட்டோ வைப்பதில் அலுவலர்கள் தீவிரம் காட்டுவதுடன், அதற்காக, விஜய் போட்டோக்களை ஆர்டர் கொடுத்து, வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement