பாகிஸ்தான் பஸ்கள் மோதி விபத்து :17 பேர் நசுங்கி பலி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது அதிவேகமாகச் சென்ற மற்றொரு பஸ் மோதியதில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சுற்றுலா தலமான ஸ்வாத் பள்ளத்தாக்கு நோக்கி பயணியர் பஸ் ஒன்று நேற்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஸ்வாத் விரைவுச் சாலையில் மர்தான் மாவட்டத்தில், எதிர்பாராத விதமாக அந்த பஸ் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மற்றொரு பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், வேகமாக சென்ற பஸ்சின் முன்பகுதி அப்படியே நொறுங்கியது. இதில் பலர் சிக்கிக்கொண்டு அலறி துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் அதற்குள் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement