சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் 'சாம்பியன்'
சென்னை: அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்க ஆதரவில், ஆர்.வி.செஸ் அகாடமி சார்பில், 2வது சர்வதேச பிடே ரேட்டிங் சதுரங்க போட்டி, மாடம்பாக்கத்தில் நிறைவடைந்தது.
போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, சர்வதேச தரவரிசை வீரர்கள் 179 பேர் உட்பட 295 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இறுதிச்சுற்றான ஒன்பதாவது சுற்றுகள் முடிவில், 8 புள்ளிகள் பெற்று தமிழக வீரர் விஜய் ஸ்ரீராம் சாம்பியன் பட்டம் வென்று, 50,000 ரூபாய் பரிசு தொகையையும் கைப்பற்றினார்.
கடும் போட்டி நிலவிய நிலையில், தமிழகத்தின் கிரித்தின் துரை, தெலுங்கானா பவன் கார்த்திகேய வர்மா மற்றும் தமிழகத்தின் பாலசுப்ரமணியம் ஆகியோர், தலா 7.5 புள்ளி கள் பெற்று, இரண்டா மிடத்தை பிடித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு; பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்
-
(அரை பக்க விளம்பர விருப்பம்) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி
-
தனியார் மனமகிழ் மன்ற மதுபான கடைகளால் மக்களுக்கு தொல்லை
-
அதிக விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட 69 இடங்கள் அவிநாசி ரோட்டில் மட்டும் 7 ஹாட் ஸ்பாட்
-
மணல் கடத்தலுக்கு உடந்தை 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
காலி நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை
Advertisement
Advertisement