போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது

காரைக்குடி:சாக்கோட்டை வடடாரத்தில் கோடையில் போதிய தண்ணீர் கிடைக்காததால் கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர் விவசாயம் பாதியாக குறைந்துள்ளது .

சாக்கோட்டை ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். இவ்வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

பெத்தாச்சிகுடியிருப்பு, பெரிய கோட்டை, அரியக்குடி, இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதியிலும் கத்தரி, வெண்டை, சோளம், மிளகாய், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி விவசாயமே அதிகம் நடைபெறும் இப்பகுதியில் தற்போது, கோடை வெயில் அதிகமாகி வருகிறது. கோடை வெயிலால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கத்தரி, வெண்டை விவசாயம் குறைந்துள்ளது.

Advertisement