பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை: 'பிரதமர் மோடியை விமர்சனம் செய்த நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: திருநெல்வேலியில் சமூக வலைதளத்தில், முதல்வர் விஜயை தரக்குறைவாக விமர்சனம் செய்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது சரியே. அநாகரிகமான, கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்த, அந்த நபருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அதே நேரத்தில், முதல்வரை இப்படி பேசுவோர் மீது மட்டும் நடவடிக்கை என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், யாரை பழித்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கும் நபர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு, முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போ ஜோசப் விஜய் என்ன வானத்திலிருந்து குதித்தவரா அமைதி மார்க்கமே ?? அவரும் சாதாரன குடிமகன் தானே அவரையும் கூண்டில் ஏற்றலாமே.... ஜோசப் விஜய்னா உங்க வாய் மூடிக்குமா முக்காவே.....!!!
பிரதமரும் ஒரு சாதாரண மனிதர்தான். குற்றவாளிக்கூண்டுக்குள் ஏற்ற முடியும் . அதிகபட்ச தண்டனையும் கொடுக்க முடியும்.
ஸ்டாலினிலிருந்து ஆரம்பிப்போமா?மேலும்
-
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
-
போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு
-
ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?
-
ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்
-
எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
-
இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,