'கொடை' ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்
கொடைக்கானல்: கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்களை பயணிகள் ரசித்தனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் தோட்டக்கலைதுறையின் ரோஜா பூங்கா 10 ஏக்கரில் உள்ளது. இங்கு 1500 வகையுடன் 16 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை மே மாதத்தில் நன்கு பூத்துக் குலுங்குகிறது. பிரையன்ட் பூங்காவில் 63 வது மலர் கண்காட்சி மே 20 அன்று தொடங்கி 31 வரை 12 நாள் நடக்கிறது. ரோஜா ரோஜா பூங்காவில் இத்தருணத்தில் பயணிகளை மகிழ்விக்க மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின், கார்ட்டூன் முயல், செல்பி ஹார்ட், செல்பி பாயிண்ட் உள்ளிட்ட 4 உருவமைப்புகளை உருவாக்கி உள்ளனர். வருகை தரும் பயணிகள் இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இதற்கிடையே லட்சக்கணக்கில் பல வண்ணங்களில் பூத்துள்ள ரோஜா பூக்களை பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
-
போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு
-
ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?
-
ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்
-
எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
-
இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,
Advertisement
Advertisement