இரட்டை மரணதண்டனை விதித்தது சரியான தீர்ப்பு: தென்மண்டல ஐ.ஜி., பேட்டி

2

மதுரை: 'விளாத்திக்குளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் தங்க முனீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சரியானது' என தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மாணவி கொலை வழக்கில் எந்த 'க்ளூ'வும் கிடைக்காத நிலையில் விசாரணையை தொடங்கினோம். சம்பவம் நடந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., மற்றும் நான் உட்பட உயர் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினோம்.

ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். சவாலாக இருந்த இவ்வழக்கில் கடந்த மார்ச் 19ல் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் தங்கமுனீஸ்வரனை கைது செய்தோம். மாணவி நகத்தில் இருந்த சதைத்துணுக்கள் டி.என்.ஏ., பரிசோதனையில் 100 சதவீதம் தங்கமுனீஸ்வரனுடன் ஒத்துப்போனது. தடயவியல் துறையின் பங்கும் இதில் முக்கியமானது.

கடந்த ஏப்.,21ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து தினமும் டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., கண்காணித்து வந்தனர். முந்தைய துாத்துக்குடி எஸ்.பி., மதன், டி.ஐ.ஜி., சரவணனின் பணி பாராட்டத்தக்கது. துாத்துக்குடி போக்சோ நீதிமன்றம் குற்றவாளி தங்கமுனீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது சரியான தீர்ப்பு என்றார்.

Advertisement