சோழவந்தானில் பக்தர்கள் பரவசம்
சோழவந்தான்: -சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த திங்கள் விழா தொடங்கி 17 நாட்கள் நடக்கும். இந்தாண்டு மே 18ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும் சிம்மம், ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் பவனி நடந்தது.




விழாவின் முக்கிய நிகழ்வாக (மே 26)-ல் திரளான பக்தர்கள் உருண்டு கொடுத்தும், அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிர்வாக அலுவலர் ராஜா, கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் தமிழருக்கு இடம்
-
26 கிராம விவசாயிகளை சந்தித்த நிகில் குமாரசாமி
-
'காஸ்' சிலிண்டர் வினியோகம் தாமதம் ஏஜன்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
சட்டசபை இடைத்தேர்தல் உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏற்பு சிவகுமாருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா
-
முதல்வர் மாற்றத்தால் பயனில்லை: சலவாதி நாராயணசாமி கருத்து
Advertisement
Advertisement