ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏற்பு சிவகுமாருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் சித்தராமையா நேற்று ஏற்று கொண்டார். இதன் மூலம் சிவகுமாருக்கு ஆப்பு வைத்து உள்ளார்.
கர்நாடகாவில் கடந்த, 2013 - 2018ல் காங்கிரஸ் ஆட்சியில், சித்தராமையா முதல்வராக இருந்த போது, கடந்த, 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையத்தை அமைத்தார். கணக்கெடுப்பு பணிக்காக 156 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது.
இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள், மாநிலம் முழுதும் சென்று மக்களை நேரில் சந்தித்து ஜாதி, கல்வி, பொருளாதாரம் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.
கடந்த 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக இருந்த போது அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
எதிர்ப்பு அந்த அறிக்கையில், கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் அதிகளவில் வசிப்பதாகவும், அதற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த அறிக்கைக்கு உயர் ஜாதிகளான லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால், குமாரசாமி அறிக்கையை வாங்கவில்லை. அவருக்கு பின் முதல்வராக இருந்த பா.ஜ.,வின் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையும் அறிக்கையை வாங்கவில்லை.
கடந்த 2023ல் சித்தராமையா மீண்டும் முதல்வரான பின், அவரிடம் அறிக்கையை சமர்பிக்கும் பணி நடந்தது. ஆனால் அப்போதும் அறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவரும் வாங்கவில்லை.
கட்சி மேலிடம் உத்தரவின் படி, கடந்த ஆண்டு புதிதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் இதை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார ரீதியான அறிக்கை என்றே கூறி வந்தார். புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கையும் தயாரானது.
பதவி பிரச்னை இந்த அறிக்கையிலும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் தான், மாநிலத்தில் அதிகளவில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
முதல்வர் பதவிக்கு பிரச்னை வரும் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மூலம், பதவியை தக்க வைக்கலாம் என்று நினைத்த சித்தராமையா, அறிக்கையை வாங்காமல் காத்திருப்பு யுக்தியை கடைபிடித்தார்.
இந்நிலையில், சித்தராமையா இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய ஆணையத்தின் தலைவர் மதுசூதன் நாயக் உள்ளிட்ட அதிகாரிகளை, நேற்று மாலை விதான் சவுதாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அவர்களிடம் இருந்து ஏற்று கொண்டார். சித்தராமையா பதவி விலகிய பின், இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றும் பொறுப்பு, புதிய முதல்வராகும் சிவகுமாருக்கு வந்துள்ளது.
இந்த அறிக்கைக்கு சிவகுமார் சார்ந்த ஒக்கலிகர் சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அறிக்கையில் உள்ளதை அமல்படுத்த மறுத்தால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் எதிர்ப்பை சிவகுமார் சம்பாதிக்க நேரிடும்; அறிக்கையில் உள்ளதை அமல்படுத்தினால் சொந்த சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும்.
பதவி விலகும் நேரத்தில் சிவகுமாருக்கு, சித்தராமையா ஆப்பு வைத்து விட்டே சென்று உள்ளார்.
முஸ்லிம்களே அதிகம் முதல்வர் சித்தராமையாவிடம் சமர்பிக்கப்பட்டு உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில், கர்நாடகாவில் முஸ்லிம்களே அதிகம் வசிப்பதாக குறிப்பிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மாநிலத்தில், 75 லட்சம் முதல், 80 லட்சம் முஸ்லிம்கள்; 60 லட்சம் முதல் 65 லட்சம் லிங்காயத்துக்கள்; 55 லட்சம் முதல் 60 லட்சம் ஒக்கலிகர்கள்; 40 லட்சம் முதல் 45 லட்சம் குருபா சமூகத்தினரும் இருப்பதாகவும் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
@block_B@
சித்தராமையா நேற்று மாலை விதான் சவுதாவுக்கு வந்த போது, முதல்வர் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள், சித்தராமையாவை பார்த்து கண்ணீர் விட்டனர். 'ராஜினாமா செய்யாதீர்கள்' என்று கூறினர். முதல்வர் எதுவும் பேசாமல் சென்று விட்டார். விதான் சவுதாவில் இருந்து வெளியே வந்த போதும், ஆதரவாளர்கள் ஒன்று கூடி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கோஷம் எழுப்பினர். அங்கு நின்ற கன்னட அமைப்பு போராட்டக்காரர் வாட்டாள் நாகராஜிடம் பேசி விட்டு, காரில் ஏறி சித்தராமையா சென்று விட்டார்.
சித்தராமையா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவதன் எதிரொலியாக, சதாசிவநகரில் உள்ள சிவகுமார் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சித்தராமையாவின் அரசு இல்லமான, காவிரி முன், நேற்று இரவு அவரது ஆதரவாளர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்து போலீசார் பஸ்சில் ஏற்றினர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதற்கு சித்தராமையா தான் காரணம்; அவரை நீக்கினால் கட்சி சர்வ நாசம் ஆகி விடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.block_B
மேலும்
-
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா; காலில் விழுந்து ஆசி பெற்றார் சிவக்குமார்!
-
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு என அச்சம்;மீட்பு பணி தீவிரம்
-
காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு இல்லை; சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அருண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சம்மன் வழங்க சென்ற நீதிமன்ற அதிகாரியை காக்க வைப்பதா? ஐகோர்ட் நீதிபதிகள் கோபம்
-
ரீல்ஸ் வீடியோவில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனா!