குன்றத்து கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் பகுதி கோயில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவகிரகங்களுடன் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி முன்பு யாகம் வளர்த்து அனுக்ஞை பூஜை , நவகிரக சாந்தி ஹோமம், மூல மந்திர ஹோமம் முடிந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

* பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியிலுள்ள குரு பகவானுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனைகள் நடந்தது.

* அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் குரு பகவானுக்கு 16வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், தீபாராதனை நடந்தது.

Advertisement