கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் ஆடி வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிேஷக ஆண்டுவிழா மற்றும் பங்குனி உத்திர விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
தல சிறப்பு
மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில், விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவர். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
நேர்த்திக்கடன்
அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிேஷகம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.
பிரார்த்தனை
அம்மை முதலான நோய்கள் மற்றும் உடல் உபாதை, வழக்கு சிக்கல், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மாரியம்மன் இருப்பதால், இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
௧௦௦ ஆண்டு கோவில்
கரூர் மாரியம்மன் கோவில், 100 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தோன்றியது. கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, பிடிமண் எடுத்து வந்து இக்கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள, பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. வைகாசி பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
தல பெருமை
மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற்றில். எப்படி தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில், இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.
மஞ்சள் நீர் கம்பம் உற்சவத்தின் போது, வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இது மஞ்சள் நீர் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும்
-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் தமிழருக்கு இடம்
-
26 கிராம விவசாயிகளை சந்தித்த நிகில் குமாரசாமி
-
'காஸ்' சிலிண்டர் வினியோகம் தாமதம் ஏஜன்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
சட்டசபை இடைத்தேர்தல் உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏற்பு சிவகுமாருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா
-
முதல்வர் மாற்றத்தால் பயனில்லை: சலவாதி நாராயணசாமி கருத்து