காத்திருப்பு போராட்டம்
மேலுார்: அரிட்டாபட்டியில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மந்தை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ( மே 27) நடத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் தாசில்தார் முத்துப்பாண்டியிடம் கும்பாபிஷேகத்தை நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அனுமதி வழங்க முடியாது என தாசில்தார், டி.எஸ். பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி பள்ளியில் 'ஷூட்டிங்' ; இயேசு சிலை அமைத்ததால் சர்ச்சை
-
இன்று பலத்த காற்றுடன் மழை; கத்திரி வெயில் நாளை நிறைவு
-
புதிய டி.ஜி.பி., யார்? மூவரின் பெயர் பரிந்துரை!
-
'ரூட்' மாறுகிறார் பா.ஜ., அண்ணாமலை; மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம்
-
ஏ.டி.ஜி.பி., அருண் விவகாரத்தில் த.வெ.க., இரட்டை வேடம்! அன்று புகார்; இன்று உயர் பதவி
-
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா
Advertisement
Advertisement