வாடிப்பட்டி சந்தையால் நெரிசல்: மக்கள் அவதி
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே செவ்வாய்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சந்தைக்கு நள்ளிரவு முதலே கோழி, ஆடு, மாடுகளை விற்க, வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வர துவங்குவர். இவர்களது மினி வேன்கள் சந்தை, பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி மெயின் ரோட்டில் இருபுறமும் ஒன்றரை கி.மீ.,க்கு அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. சந்தைக்குள் சென்று வரும் வாகனங்கள், லாரிகளால் மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும், பின் காய்கறி சந்தையால் மாலையில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. சில பஸ்கள் வாடிப்பட்டியை தவிர்த்து நான்கு வழிச்சாலையில் சொல்வதால் பயணிகள் பாதிக்கின்றனர். கூடுதல் போலீசார் மூலம் போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு