பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
நமது நிருபர்
பிலிப்பைன்ஸில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள சான் ஜோஸ் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
பலியான 3 பேரும் மாணவர்கள் ஆவர். காயமடைந்த 5 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை 2 பேர் நிகழ்த்தி உள்ளனர். ஒருவர் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆவார்.
அந்த பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மற்றொரு நபர் பின்னர் அதிகாரிகளிடம் சரணடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் 9 மி.மீ. கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு