திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

79


மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 22) மீண்டும் ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement