மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் அபாயம் :தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
மானாமதுரை:மானாமதுரை மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்களுக்கு இடையே ரோடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் சேதமடைவதோடு விபத்து அபாயமும் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை நகர் பகுதியில் பைபாஸ், பழைய பஸ் ஸ்டாண்ட், சிப்காட்,கல்குறிச்சி, தயாபுரம் உள்ளிட்ட பகுதிகள், கட்டிக்குளம், முத்தனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களையும் இணைக்கும் ரயில்வே கேட் பகுதிகளில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளன. தண்டவாளங்கள் கடக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ரோடு நீண்ட வருடங்களாக பராமரிப்பு செய்யப்படாததால் பெயரளவிலேயே சாலையாக உள்ளது.
தண்டவாளங்களுக்கு இடையே மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளதால் டூவீலர்கள்,ஆட்டோக்கள், கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மிகவும் மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தினசரி பல்வேறு தேவைகளுக்காக இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சில நேரங்களில் வாகனங்கள் ரயில்வே கேட்டிற்குள்ளேயே பழுதாகி நின்ற சம்பவங்களும் நடைபெற்று வரும் நிலையில் திடீரென ரயில் வந்தால் பெரும் விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து மானாமதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைத்து ரயில்வே கேட்பகுதி ரோடுகளையும் உடனடியாக சீரமைத்து, தண்டவாளங்கள் கடக்கும் பகுதிகளில் தரமான கான்கிரீட் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு