தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
காரைக்குடி:அமராவதிப்புதுார் கிராமிய பயிற்சி மையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தோட்டக்கலை பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் அமைச்சர் பிரபு ரூ.19 லட்சத்து 78 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா வரவேற்றார். செட்டிநாடு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருண்குமார்,
செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கமல சுந்தரி, காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் அருண்ராஜ் பேசினர். சிவகங்கை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சங்கர லட்சுமி, நேர்முக உதவியாளர் லீமா ரோஸ், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குனர் சுமதி கலந்து கொண்டனர்.