குழாய் உடைந்து குடிநீர் வீண்
சாத்துார்: சாத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மின்வெட்டு குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் தினசரி 18 முதல் 28 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்து வருகிறது.
இந்த குடிநீரை கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்திரப்பட்டி விலக்கு அருகில் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வார காலமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள மழை நீர் வடிகாலில் கலந்து வருகிறது.
நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா; காலில் விழுந்து ஆசி பெற்றார் சிவக்குமார்!
-
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு என அச்சம்;மீட்பு பணி தீவிரம்
-
காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு இல்லை; சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அருண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சம்மன் வழங்க சென்ற நீதிமன்ற அதிகாரியை காக்க வைப்பதா? ஐகோர்ட் நீதிபதிகள் கோபம்
-
ரீல்ஸ் வீடியோவில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனா!