கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு என அச்சம்;மீட்பு பணி தீவிரம்

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பீஹார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள உமநாத் கங்கா காட் அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

கோவிலுக்கு படகில் சென்ற பக்தர்கள் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது: படகில் 14 முதல் 15 பேர் இருந்தனர். அவர்களில் ஏழு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்றவர்கள் வேறு ஒரு படகைப் பயன்படுத்தி மீட்கப்பட்டனர் என்றனர்.

இதுவரை ஏழு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து பேரைக் காணவில்லை. மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement