மனைவி பேசததால் கணவர் தீக்குளித்து பலி
கம்பம், மே 28
மனைவி தன்னுடன் அலைபேசியில் பேசாததால் கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பலியானார்.
கம்பம் ஆலமரத் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் 36. இவர் ஆங்கூர் பாளையம் ரோட்டில் உள்ள டூவிலர் விற்பனை செய்யும் கடையில் மெக்கானிக் வேலை செய்தார். இவர் சென்னையை சேர்ந்த பவகானி 32, என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர். 20 நாட்களுக்கு முன்பு மனைவி குழந்தைகளுடன் சென்னையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் மதன்குமார் மட்டும் கம்பம் திரும்பி வந்தார். கம்பம் வந்த பின் மனைவி தன்னுடன் அலைபேசியில் பேசவில்லை என்று மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் வேலை பார்க்கும் கடையில் இருந்த பெட்ரோலை உடலில் தனக்கு தானே ஊற்றி உடலில் தீ வைத்துள்ளார். உடலில் எரிச்சல் தாங்காமல் அருகில் இருந்த தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்துள்ளார். அங்கிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
புகழூர் டி.என்.பி.எல்., - ஐ.டி.ஐ.,யில்மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
-
உரம் சிக்கனம் தேவை இக்கணம்
-
கரூரில் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டிஇந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணி வெற்றி
-
வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
-
சட்ட விரோதமாக மதுவிற்ற பெண்ணுக்கு காப்பு
-
சுற்று··ச்சூழல் பாதுகாப்பைவலியுறுத்தி 'வாக்கத்தான்'