சட்ட விரோதமாக மதுவிற்ற பெண்ணுக்கு காப்பு



அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.சின்னதாராபுரம் போலீசார், நஞ்சைகாளக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,


இதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி கருப்பாத்தாள், 52, சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement