புகழூர் டி.என்.பி.எல்., - ஐ.டி.ஐ.,யில்மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர்:-புகழூர் டி.என்.பி.எல்., ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரீஷியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், இயக்க உதவியாளர் (காகிதகூழ் மற்றும் காகிதம்) ஆகிய பிரிவுகளுக்கு, 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்தபட்சம், 10 ம் வகுப்பு தேர்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு, 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின், 04324-296442, 9486505953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement