கரூரில் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டிஇந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணி வெற்றி


கரூர்:கரூரில் நடந்த, அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின்வாரிய அணியும் வெற்றி பெற்றது.

கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி.நாயுடு சுழற்கோப்பைக்கான, 66வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 21ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது. நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டி நடந்தது. அதில், ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும், கேரள மின் வாரிய அணியும் மோதின. இறுதியில், இந்தியன் வங்கி வெற்றி பெற்றது. கேரள மின் வாரிய அணி இரண்டாமிடமும், சென்னை ஐ.ஓ.பி., அணி மூன்றாமிடமும், இந்தியன் ஏர்போர்ஸ் அணி நான்காமிடமும் பெற்றது.

Tamil News
பெண்கள் அணியில், கேரள மின்வாரிய அணி முதலிடம், ஹூப்ளி சவுத் வெஸ்ட ர்ன் ரயில்வே அணி இரண்டாமிடம், சென்னை சதர்ன் ரயில்வே அணி மூன்றாமிட, கொல்கத்தா நார்த் வெஸ்டர்ன் ரயில்வே அணி, நான்காமிடம் பிடித்தது. வெற்றி பெற்றி அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. குமாரசாமி பொறியியல் கல்லுாரி தாளாளர் ராமகிருஷ்ணன், ஆசியன் பேப்ரிக்ஸ் நிறுவன தலைமைஇயக்குனர் அசோக் ராம்குமார், கரூர் கூடைப்பந்து குழு தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் சூர்யநாராயணன், செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement