விபத்தில் காயமடைந்த பெண் இறப்பு
ஆண்டிபட்டி, மே 28 -
குன்னூர் அருகே அரசு பஸ் சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த இளவரசு 41, ஓட்டிச்சென்றார். குன்னூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது ரோட்டின் நடுவில், சென்டர் மீடியனில் பஸ் மோதியதில் 3 பேர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் கம்பத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி 48, சிகிச்சை பலனின்றி இறந்தார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement