அனைத்து வடிகால் வாய்க்கால்களைதுார் வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்:பாசன வாய்க்கால்களை துார்வாருவது போல, அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார் வார வேண்டும் என, டெல்டா மற்றும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் எதிர்பாார்க்கின்றனர்.
தமிழகத்தின் நில அமைப்பு பூகோள ரீதியாக, மேற்கு பகுதி உயர்ந்தும், கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும், வடிநில பகுதியாக கணக்கிட்டு, மேற்கு திசையில் இருந்து, கிழக்கு திசையை நோக்கி ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் உள்ளன. எனவே, பாசன வாய்க்கால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, வடிகால் வாய்க்கால்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும்.
இதுகுறித்து, டெல்டா மற்றும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பிரதான பாசன வாய்க்கால்களுக்கு மட்டும், துார் வார நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடிகால் வாய்க்கால்களை கண்டுகொள்வதில்லை. காவிரி பாசன மாவட்டங்கள் அனைத்தும், கடைமடை பாசன பகுதி என்பதால், வடிகால் வாய்க்கால்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் கடல் நீர்மட்டம், 12 மணி நேர உயர்வும், 12 மணி நேர உள்வாங்குதல் நிகழ்வும் ஏற்படும். இதனால், கடலோரம் அமைந்துள்ள மாவட்டங்களில், மழை காலங்களில் மழை நீர் எளிதில் வடிவது இல்லை. மழை காலங்களில் நீர்மட்டம் உயரும் போது, வடிகால் வாய்க்கால்களை துார் வாரி பராமரிப்பு செய்யாததால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் வீணாகிறது.
எனவே, பாசன வாய்க்கால்களுக்கு முக்கியத்துவம் தந்து, நிதி ஒதுக்கி துார் வாரும் பணிகள் செய்வது போல, குறுவை, தாளடி, சம்பா, சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் முன், அனைத்து வடிகால் வாய்க்கால்களும் துார் வாரப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காட்சி பொருளாக மணிக்கூண்டு
-
பிரதோஷ வழிபாடு
-
தேடல்களை குறைக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் பேச்சு
-
அரசு மருத்துவமனை வாறுகால்களில் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் தாங்க முடியல
-
மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்; ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு
-
இன்றைய நிகழ்ச்சி