கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் வியாழ கிழமைகளில் கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கருட தரிசனம் கோடி புண்ணியம் என்றும் மகா விஷ்ணு வாகனம் என்பதாலும், கருட வாகனத்தில் வட்டமிட்டுவதால் நல்ல சகுணம் உண்டாகும் என்பது ஐதீகம்.
விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, வடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் நெய்வேலி ரயில் நிலையம் அருகில் மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை கருட தரிசனம் காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வியாழன் கிழமைகளில் கருட தரிசனம் பார்ப்பதால் தீராத மனத்துயர் நீங்குவதோடு, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதால் பக்தர்கள் நேற்று காலை முதல் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் கருடதரிசனம் காண வந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement