கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள்: 'பிரசிடென்ட்ஸ் கலர்' அங்கீகாரத்தால் குஷி
எங்களோட உழைப்புக்குக் கிடைச்ச ஆகச்சிறந்த அங்கீகாரம் இது என்று புதுச்சேரி காக்கிகளின் முகத்தில் இப்போது அப்படியொரு பெருமிதப் புன்னகை.
காரணம், சட்டம்- ஒழுங்கை தக்க வைப்பதிலும், மக்கள் சேவையிலும் தொடர்ந்து கெத்து காட்டி வரும் புதுச்சேரி போலீஸஸ் துறைக்கு, இந்தியாவின் மிக உயரிய கவுரமான 'ஜனாதிபதியின் பிரசிடென்ட்ஸ் கலர்' எனும் வண்ண விருது வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சரி, இதிலென்ன ஸ்பெஷல். அது என்ன 'பிரசிடென்ட்ஸ் கலர்'? என்று பலருக்கும் கேள்வி இருக்கும்.
சிம்பிளாகச் சொன்னால், இது சினிமாவுக்கு 'ஆஸ்கர்', கிரிக்கெட்டுக்கு 'உலகக்கோப்பை' மாதிரி.. நாட்டின் ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான ஜனாதிபதியால் , ஒரு படைப்பிரிவின் பல ஆண்டுகால அசாத்திய வீரம், தியாகம் மற்றும் ஒழுக்கத்தை பாராட்டி வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இது.
ராணுவப் பிரிவுகளுக்கு மட்டுமே அதிகம் வழங்கப்பட்டு வந்த இந்த அந்தஸ்து, இப்போது மிகச்சிறப்பாகச் செயல்படும் மாநில-யூனியன் பிரதேச போலீஸ் துறைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது புதுச்சேரி போலீஸ் துறையின் மகுடத்தில் இந்த வைரக் கல் பதிந்திருக்கிறது.
இந்த விருது கிடைத்துவிட்டதால், புதுச்சேரி போலீஸ் துறையின் கம்பீரம் இன்னும் ஒருபடி மேலே செல்லப்போகிறது. இனி புதுச்சேரி போலீஸ் துறையின் உயர் அதிகாரி முதல் இரண்டாம் நிலை போலீசார் வரை அனைவருடைய சீருடையின் இடது கை சட்டையிலும் இந்த ஜனாதிபதியின் வண்ணம் பொறிக்கப்பட்ட ஒரு பிரத்யேகச் சின்னம் கம்பீரமாக இடம் பெறும்.
புதுச்சேரி போலீஸ் துறைக்கென பிரத்யேக சின்னம் மற்றும் வரலாற்றுச் சாதனைகள் பொறிக்கப்பட்ட ஒரு புதிய 'வண்ணக் கொடி' ஜனாதிபதியால் வழங்கப்படும். இனி அதிகாரப்பூர்வ அணிவகுப்புகளில் இந்தக் கொடிதான் முன்வரிசையில் பட்டொளி வீசிப் பறக்கும்.
இதனால் தான் அண்மையில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி போலீஸ் துறைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது, போலீஸ் அதிகாரிகள் முதல் இரண்டாம்ல நிலை ேபாலீசார் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை என நெகிழ்ந்துள்ளார். கூடவே, ஐஆர்பிஎன் 2-வது பட்டாலியன் அமைக்கவும் ஒப்புதல் கிடைத்திருப்பதால், புதுச்சேரி காக்கி வட்டாரமே டபுள் குஷியில் இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கும் புதுச்சேரிக்கு, இந்த 'பிரசிடென்ட்ஸ் கலர்' கவுரவம் கிடைத்திருப்பது, புதுச்சேரி போலீஸ் துறையின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்புக்குக் கிடைத்த 'சர்டிபிகேட்'. இனிமே புதுச்சேரி போலீஸாரைப் பார்க்கும்போது அவங்க இடது கை சட்டையை நோட் பண்ணுங்க பாஸ்.. அங்கே நம் நாட்டின் மிக உயரிய பெருமை 'பேட்ஜ்' வடிவத்தில் மின்னிக் கொண்டிருக்கும்...
மேலும்
-
வாலிபர் மீது தாக்குதல்
-
கால்நடைகள் உயிரிழப்பு சந்தை விலையில் நிவாரணம் அமைச்சரிடம் விவசாயிகள் மனு
-
‘தட்கல்’ மின் திட்டத்தில் மின் இணைப்பு எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மீஞ்சூரில் மின்வெட்டை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
-
காவல்பட்டியில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் போராட்டம்
-
கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்கள்