பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி 'வார் ரூம்' :ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்
அமராவதி: ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, 'சக்தி பாதுகாப்பு வார் ரூம்' அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.
நாடு முழுதும் பெண்கள் பாதுகாப்பு ஆளும் அரசுகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. குற்றம் நடப்பதற்கு முன் அவற்றை தடுக்க, 'வார் ரூம்' எனப்படும் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஆந்திர போலீசார் துவங்க உள்ளனர். இதற்கு, 'சக்தி பாதுகாப்பு வார் ரூம்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஆந்திர போலீசார் கூறியதாவது:
தொழில்நுட்பம், விழிப்புணர்வு, பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் சக்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் வார் ரூம் தொழில்நுட்ப பிரிவின் கீழ் இடம்பெறும்.
இங்கு கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கண்காணிப்பு, ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். தொகுதி வாரியாக பள்ளி, கல்லுாரி மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே சைபர் பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். 'சக்தி வாரியர்ஸ் கிளப்' என்ற பெயரில் பெண்களையும் பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வாலிபர் மீது தாக்குதல்
-
கால்நடைகள் உயிரிழப்பு சந்தை விலையில் நிவாரணம் அமைச்சரிடம் விவசாயிகள் மனு
-
‘தட்கல்’ மின் திட்டத்தில் மின் இணைப்பு எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மீஞ்சூரில் மின்வெட்டை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
-
காவல்பட்டியில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் போராட்டம்
-
கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்கள்